கரோனா லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட முடக்கம் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்கத்திலிருந்து மீண்டெழ தற்சார்பு இந்தியா என்ற திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி ரூ. 20 லட்சம் கோடிக்கு நிதிச் சலுகையை வெளியிட்டுள்ளார்.
இந்த நிதிச் சலுகையின் விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக வெளியிட்டார். சிறு, குறு தொழில், வேளாண்மை, மீன்பிடித் தொழில், நிலக்கரி, மின்சாரம், விமானப் போக்குவரத்து, விண்வெளி, பாதுகாப்பு, சுகாதாரம், பொதுத்துறை நிறுவனங்கள், ஊரக வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ. 20 லட்சம் கோடி தொகையின் முழு விவரத்தையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டார்.