தொடர்பு இல்லாத அட்டை மூலம் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி சலுகை அளித்துள்ளது.
ஜனவரி முதல் ஒவ்வொரு பரிமாற்றத்திலும் தொடர்பு இல்லாத அட்டை (contactless card transactions) மூலம் ரூ.5000 வரை செலுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. PIN-யை உள்ளிடாமல் தொடர்பு இல்லாத அட்டை மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதற்கு முன் இந்தப் பரிவர்த்தனைக்கான வரைமுறை ரூ.2000 ஆக இருந்தது.
இது தொடர்பாக என்பிசிஐ-யின் தலைமை நிர்வாக இயக்குநர் திலீப் வெளியிட்டுள்ள செய்தியில், "இணைய பரிவர்த்தனையை ஊக்குவிக்கும்வகையில் மின்-ஆணை வரம்பை அதிகரித்துள்ள ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை வரவேற்கத்தது. இந்த நடவடிக்கை இணைய பரிவர்த்தனையை அதிகரிக்க உதவும். மேலும், பணம் இல்லாத பரிவர்த்தனை செய்யும் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான திசையில் அனைவரையும் படிப்படியாக இணைக்கும்.