ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை இந்தியாவின் ‛டாப்-100' பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார்.
நாட்டின் 100 பணக்கார தனிநபர்களில் முகேஷ் அம்பானி 88 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 லட்சத்து 65 ஆயிரத்து 250 கோடி சொத்துகள் உள்ளன.
இவர் ஃபோர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13ஆவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார். முகேஷ் அம்பானிக்கு அடுத்த இடத்தை 25 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய அதானி குழுமத்தின் குழுமத்தின் கெளதம் அதானி பிடித்துள்ளார்.
ஹெச்.சி.எல் நிறுவனர் சிவ நாடார் மூன்றாவது இடத்தில் ஹெச்.சி.எல் நிறுவனர் சிவ நாடாரும், 4ஆவது இடத்தில் அவன்யூ சூப்பர்மார்க்கெட் நிறுவன உரிமையாளர் ராதாகிஷண் தமானியும், 5ஆவது இடத்தில் அசோக் லேலாண்ட்டின் இந்துஜா சகோதரர்கள் உள்ளனர்.
இவர்களை தொடர்ந்து 6 முதல் 10 இடங்கள் முறையே, சீரம் இந்தியா அதிபர் சைரஸ் பூனாவல்லா, பல்லோன்ஜி மிஸ்திரி, உதய் கோடக், கோத்ரெஜ் குடும்பம், லட்சுமி மிட்டல் ஆகியோர் உள்ளனர்.
ஃபோர்ப்ஸ் இந்தியா அறிக்கையின்படி, முகேஷ் அம்பானியின் சொத்துக்களின் நிகர மதிப்பில் 37.5 பில்லியன் டாலர் சேர்ந்துளது. "உலகப் பொருளாதாரமே இந்த ஆண்டு பின்னடைவை சந்தித்தது. இருந்தபோதிலும், இந்தியாவின் பணக்காரர்களின் சொத்துக்களின் மதிப்பு ஏற்கனவே இருந்ததைப் போலவே தொடர்கிறது" என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை சுட்டிக்காட்டி உள்ளது.
இந்தப் பட்டியலில் கரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் சைரஸ் பூனவல்லா (Cyrus Poonawalla) நிறுவனமும் இடம்பெற்றுள்ளது. பொதுவாக 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட இந்த ஆண்டு செல்வந்தர்களின் செல்வத்தில் அதிகரிப்பு காணப்படுகிறது”என்று ஃபோர்ப்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உங்களின் கடனை மறுசீரமைக்க நினைக்கிறீர்களா? இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்!