தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கரோனா காலத்திலும் அந்நிய முதலீட்டில் உச்சம் தொட்ட இந்தியா - பொருளாதார செய்திகள்

இந்தியாவில் 2020ஆம் ஆண்டு அந்நிய நேரடி முதலீடானது 27% உயர்வைக் கண்டுள்ளதாக ஐ.நா.வைச் சேர்ந்த அமைப்பு ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது.

FDI
FDI

By

Published : Jun 22, 2021, 6:28 AM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, கடந்த இரு ஆண்டுகளில் சர்வதேச பொருளாதாரம் முடக்கத்திற்கு ஆளானது.

இந்தச் சூழலிலும் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான புள்ளிவிவரம் இந்தியாவிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.

அந்நிய முதலீடு 27% உயர்வு

2020ஆம் ஆண்டில் சர்வதேச அந்நிய நேரடி தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் சர்வதேச அளவில் அந்நிய நேரடி முதலீடு 35% விழுக்காடு வீழ்ச்சி கண்டுள்ளது.

அதேவேளை, இந்தியாவில் 2020ஆம் ஆண்டு அந்நிய நேரடி முதலீடானது 27% உயர்வைக் கண்டுள்ளது. இந்த புள்ளிவிவரத்தின்படி சர்வதேச அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் சீனாவும் உள்ளன.

ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன. இந்தியாவின் அண்டைநாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அந்நிய நேரடி முதலீட்டில் வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சியோமி மி 11 லைட்: அழகான, ஸ்டைலான, க்யூட்டான ஸ்மார்ட்போன்!

ABOUT THE AUTHOR

...view details