தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாய் மதிப்பு!

மும்பை: கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துவரும் நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

ரூபாய்
ரூபாய்

By

Published : Mar 19, 2020, 9:52 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை உலுக்கிவரும் நிலையில், அதன் காரணமாக உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இந்தத் தாக்கம் இந்தியாவிலும் தற்போது எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. விமானப் போக்குவரத்து துறை, சுற்றுலாத் துறை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில் தற்போது உற்பத்தித் துறையிலும் இந்தத் தாக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் அமெரிக்க டாலாருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 75 ரூபாயாக சரிந்துள்ளது. அதேபோல் இந்தியப் பங்குச்சந்தைகளும் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 28 ஆயிரத்து 200 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 8 ஆயிரத்து 200 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இதையும் படிங்க:'நிலுவைத் தொகை செலுத்த கூடுதல் அவகாசம் இனி கிடையாது': அச்சத்தில் ஏர்டெல், வோடாபோன்

ABOUT THE AUTHOR

...view details