மும்பை: கோவிட்-19 அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 8 மாநிலங்களில் தான் நாட்டின் மொத்த மதிப்பின் 60 விழுக்காடு ஜிடிபி உள்ளது என்றும், மேலும் தடைகள் தொடர்ந்தால் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் எனவும் கிரிசிலின் தனது ஆராய்ச்சிப் பிரிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்டவை அடங்கிய எட்டு மாநிலங்களில் தான், நாட்டின் 58 விழுக்காடு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு மூன்றாவது முறையாக மே 31ஆம் தேதி வரை, சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. மகாராஷ்டிரா போன்ற பாதிக்கப்பட்ட மாநிலங்களும் இந்த ஊரடங்குத் தடைகளை மேற்கொள்ள முடிவுசெய்துள்ளன.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்காக 10% மட்டுமே பிடித்தம் செய்யப்படும்: மத்திய அரசு
முன்னதாக இந்தியாவில் மொத்த உள்நாட்டு வர்த்தகம் 5 விழுக்காடு அளவுக்கு குறையும் என அமெரிக்க வணிக ஆய்வு நிறுவனமான கோல்ட்மேன் சேக்ஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.