ஜிஎஸ்டியின் 37ஆவது கவுன்சில் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத் திருத்தத்தின்படி 2019-20ஆம் ஆண்டு நிதியாண்டிலிருந்து, வேறு எந்தச் சலுகையும் பெறாத உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 22 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.
"கார்ப்பரேட் வரிக் குறைப்பு நிதி அபாயங்களை ஏற்படுத்தும்":மூடி நிறுவனம் தகவல்! - கார்பொரேட் வரி செய்தி
கார்ப்பரேட் வரிக்குறைப்பதன் மூலம் நிதி அபாயங்கள் ஏற்படும் என பல நிறுவனங்கள் அதன் கருத்தை தெரிவித்துள்ளன
இதனைத் தொடர்ந்து பல நிறுவனங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நியூயார்க்கை (New York) தலைமையிடமாகக் கொண்ட நிதி சேவை நிறுவமான மூடி (Moody) , கார்ப்பரேட் வரியை குறைப்பதால் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நிரந்தர தீர்வு காணமுடியாது என்றும், மேலும் இந்த சலுகைப்பொருள் வணிகம் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டும் தான் பயன்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் மற்றொரு நிதி நிறுவனமான எஸ் அண்ட் பி குளொபல்ஸ் (S&B Globals), கார்ப்பரேட் வரி குறைப்பதன் மூலம் இதுவரை இருந்து வரும் 3.5 விழுக்காடுகளாக இருந்து வரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.3 விழுக்காடுகளாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.