டெல்லி: நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 9.6 விழுக்காடாக இருக்கும் என ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீசஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கு முன் வளர்ச்சி, 13.9 விழுக்காடாக இருக்கும் எனக் கணித்துஇந்நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதைக் குறைத்து, 9.6 விழுக்காடாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ஜூன் காலாண்டில் பொருளாதார சரிவை தடுப்பதில், வேகமாக தடுப்பூசிகளை போடுவது முக்கியப் பங்காற்றும் என்றும் தனது அறிக்கையில் மூடிஸ் குறிப்பிட்டுள்ளது.