நாட்டில் நிலவிவரும் பொருளாதார பாதிப்பை சீரமைக்கும் விதமாக ரிசர்வ் வங்கி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரெப்போ வட்டி விகிதத்தில் 0.40 விழுக்காடு குறைப்பு என்ற அறிவிப்பையும், நிதிச் சந்தையில் கூடுதல் பணப்புழக்கத்திற்கு வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 'சந்தையில் தேவைக்கான சுணக்கம் கடுமையாக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அப்படியிருக்க தேவைச் சிக்கலை சீர்செய்யாமல் பணப்பழக்கத்தை அறிவிப்பதன் பயன் என்ன' என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.