தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மத்திய அரசின் பொருளாதார அறிவிப்புகள் பயன் தராது: சுபாஷ் சந்திரா - மத்திய முன்னாள் நிதித்துறைச் செயலர் சுபாஷ் சந்திரா கார்க்

மத்திய அரசின் கவர்ச்சிகரமான 20 லட்சம் கோடி ரூபாய்க்கான 5 அடுக்கு பொருளாதார மேம்பாடு திட்டங்கள் பெரிய அளவில் பயன் தராது என முன்னாள் மத்திய நிதித்துறைச் செயலர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும், 10 கோடி மக்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.

சுபாஷ் சந்திரா கார்க், Subash Chandra Garg
சுபாஷ் சந்திரா கார்க்

By

Published : May 20, 2020, 4:39 PM IST

டெல்லி: மத்திய அரசின் 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் மூலம் உடனடி பயன்கள் எதுவும் இருக்காது என முன்னாள் மத்திய நிதித்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய சுபாஷ் சந்திரா கார்க், “மூன்று மேம்பட்ட பார்வைகள் இந்த பொருளாதார திட்டத்தில் இருந்தன. ஒன்று பொருளாதார வளர்ச்சி, இரண்டாவதாக தளர்ந்து கிடக்கும் தொழில்கள், மூன்றாவதாக கரோனா ஊரடங்கினால் ஏற்படும் வேலையிழப்புகள் ஆகும்.

10 கோடி மக்கள் வேலையிழக்க வாய்ப்புள்ளது. அதில் பெருமளவு மக்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். எனவே, அரசின் திட்டங்கள் யாரை சென்றடையவேண்டும் என்பதில் சிக்கல் உள்ளது. எந்த இடத்தில் பெருமளவு பாதிப்புகள் உள்ளதோ, அந்த இடத்தில் மத்திய அரசின் அறிவிப்புகள் செயலாற்ற வேண்டும்.

கரோனா பணியாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகள்: மஹிந்திரா அறிவிப்பு!

மேலும், அரசின் அறிவிப்புகள் பெரிதும் பணப்புழக்க கூறுகளில் முதலீடு செய்வதில் தான் உள்ளது. நிதிக் கூறுகளில் முதலீடு என்பது குறைவு தான். இங்கு வணிக செயல்பாடுகள் தொடங்கப்பட்டதால் பட்டினி என்பது குறையும்.

ஆனால் அரசு வேலையிழந்து தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலார்களுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டும். ரூ.3000 முதல் ரூ.7000 வரை அவர்களுக்கு பணமாக மாதம் ஒரு முறை உதவிட வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details