டெல்லி: கால்நடை வளர்ப்பு, மேம்பாடு ஆகியவற்றுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பிற அறிவிப்புகள் பின்வருமாறு:
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தேசியக் கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள மாடுகள், ஆடுகள், பன்றிகள் என பொருளாதாரத்துக்காக வளர்க்கப்படும் அனைத்துக் கால்நடைகளுக்கும் நோய்த்தடுப்பு மருந்துகள் அளிக்கப்படும்.
தேசிய விலங்கு நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம், 13,343 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாடு, எருமை, ஆடு, பன்றி உள்பட 53 கோடி விலங்குகளுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை இந்தத் திட்டத்தில் 1.5 கோடி பசு, எருமைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள்
நாட்டின் பல பகுதிகளில் பால் உற்பத்தி அதிகமாக உள்ளது. தனியார் முதலீடுகளுக்கும் வாய்ப்பு அதிகம். எனவே, பால் பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுத் தயாரிப்புகள், கால்நடை தீவன உள்கட்டமைப்பை மேம்படுத்த, 15,000 கோடி ரூபாய் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு நிதி உருவாக்கப்படும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.