டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மத்திய மாநில உயர் அலுவலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சரக்கு மற்றும் சேவை வரியை ஊக்குவிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் என்று விவாதிக்கப்பட்டது.
இந்திய ஜிடிபி சரிவில் இருப்பதாக கணித்த மூடீஸ்..! வெளியான பகீர் தகவல்
சிறந்த கட்டமைப்புடன் கூடிய வழிமுறைகளை வகுக்கவும், போலியான வரிச் சலுகைகள் பெறும் கணக்குகளை அடையாளம் காணவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் செலுத்தப்படும் வரியைக் கண்காணிக்கவும், மத்திய மாநில அரசுகளின் சுமுகமான பங்களிப்பு குறித்தும் அலசப்பட்டது.
ஜிஎஸ்டி வருவாயை ஊக்குவிக்க என்ன செய்யலாம்? பிரதமர் அலுவலகத்தில் கூட்டம் குறைவான வரி செலுத்துவதாக, சில மாநிலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் சில மாநிலச் செயலாளர்கள் காணொலி மூலம் கலந்துரையாடலில் பங்கேற்றனர். செப்டம்பர் மாதம் கணக்கின்படி, 19 மாதம் குறைந்த அளவை ஜிஎஸ்டி வருவாய் எட்டியுள்ளதைத் தொடர்ந்து, இந்த பிரதமர் அலுவலகக் கூட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.