தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தடுப்பூசி திட்டத்தில் வங்கிப் பணியாளர்களுக்கு முன்னுரிமை: மத்திய நிதியமைச்சகம் கடிதம் - நிதிதுறை செயலர் திபாசிஸ் பாண்டா

கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தில் வங்கித்துறை பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

bank employees
bank employees

By

Published : May 15, 2021, 7:40 AM IST

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி திட்டம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. நிதிதுறை செயலர் திபாசிஸ் பாண்டா எழுதியுள்ள கடிதத்தில், 'மாநில அரசுகள் வங்கி ஊழியர்கள், காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், வணிக செய்தியாளர்கள், ஏனைய நிதித்துறை செயல்பாட்டாளர்களுக்கு தடுப்பூசி திட்டத்தில் முன்னுரிமை தர வேண்டும்.

இந்த இக்கட்டான சூழலில் நிதிச் சேவை தொடர்ந்து நடைபெற வங்கிப் பணியளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் விரைந்து தடுப்பூசி செலுத்தும் முயற்சியை அனைத்து மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டும். ஊரடங்கு காலத்தில் பணியார்கள் இடர்பாடுகள் இன்றி பணிக்கு சென்றுவர மாநில நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்' எனக் கடிதத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 13.5 லட்சம் பேர் வங்கித்துறையில் பணியாற்றிவரும் நிலையில், கோவிட்-19 பாதிப்பு காரணமாக இதுவரை சுமார் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இந்திய வங்கி சமேளனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:'வாரத்திற்கு நான்கு நாள்களே வேலை' பணியாளர்களுக்கு ஓயோ அசத்தல் சலுகை!

ABOUT THE AUTHOR

...view details