தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பொருளாதார வளர்ச்சிக்கு மூலதன சந்தைகள் பெரும்பங்கு வகிக்கின்றன: செபி தலைவர் - அஜய் தியாகி

வருடாந்திர மூலதன சந்தைகள் மாநாடு 'கேபாம் 2021 - இந்தியாவுக்கு அப்பால் @ 75’ நிகழ்வில் உரையாற்றிய செபி தலைவர் அஜய் தியாகி, “வங்கி சாராத சேமிப்பின் பெரும்பகுதி மூலதன சந்தைகள் மூலம் நடக்கிறது. இது பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

funding economic growth
funding economic growth

By

Published : Jul 29, 2021, 9:54 AM IST

டெல்லி: வருடாந்திர மூலதன சந்தைகளின் 18 ஆவது மாநாட்டில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான ’செபி’இன் தலைவர் அஜய் தியாகி உரையாற்றினார்.

அதில், வங்கி சாரா பண சேமிப்பு திறன்கள் பெருகி வருவதால், நாட்டில் மூலதன சந்தைகளின் திறன் வலுவாக இருக்கிறது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னேறி செல்கிறது.

கரோனா காலத்திற்கு பிறகு நிறுவனங்கள் நிதித் திரட்டும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளது. அதில் நிறைய பேர் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இதன் காரணமாகவே அறிமுக பங்கு விற்பனை வழிமுறைகளை செபி எளிதாக்கி இருக்கிறது.

பங்கு வெளியிட்டிற்கு தயாராகும் புதிய வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இலகுவான மற்றும் எளிதான நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதன்காரணமாக புதிதாக களம்காணும் நிறுவனங்கள், தங்களுக்கேற்ற நிதி நிலையை உருவாக்க சாத்தியக்கூறுகள் அதிகமாகியுள்ளன.

முதலீடு செய்வதற்கும் முன்னெப்போதும் இல்லாத அளவில் தனிநபர்கள் தயாராக இருக்கின்றனர். இது மேலும் தனிநபர் சேமிப்புத் திறனை வலுபெற செய்யும். மறைமுகமாக இது நாட்டின் பெருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details