தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

Budget2020 Live Update: மத்திய பட்ஜெட் 2020-21: நிர்மலா சீதாராமன் உரை! தகவல்கள் உடனுக்குடன்..! - Union budget 2020

budget 2020
budget 2020

By

Published : Feb 1, 2020, 10:15 AM IST

Updated : Feb 1, 2020, 1:55 PM IST

13:46 February 01

பட்ஜெட் உரை நிறைவு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக பட்ஜெட் உரையை வாசித்ததால் அயர்ச்சியாகக் காணப்பட்டார். அதனால் தனது உரையை அவர் நிறைவுசெய்தார். அப்போது பட்ஜெட் அறிக்கையில் மேலும் இரண்டு பக்கங்கள் மீதமிருந்தன.

13:29 February 01

பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

நாட்டின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கலான நிலையில், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் 602.06 புள்ளிகள் சரிந்து 40,121.88 ஆக வர்த்தகம் ஆனது.

தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் நிப்ஃடி 207.20 புள்ளிகள் குறைந்து 11,754.90 ஆக வர்த்தகம் ஆனது.

13:26 February 01

ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு

வருமான வரியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். குறைந்த விலை வீடுகளின் மானியம் ஓராண்டுக்கு மேலும் நீட்டிக்கப்படும்.

13:10 February 01

தனிநபர் வருமான வரி குறைப்பு

ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை 10 விழுக்காடு

ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 15 விழுக்காடு

ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 20 விழுக்காடு

ரூ.12.5 முதல் ரூ.15 லட்சம் வரை 25 விழுக்காடு வரி

ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வரி விலக்கு.

பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை மோடி அரசின் மற்றுமெரு சாதனை.

டிவிடண்ட் வழங்கும் போது விற்பனையாளர்களிடம் பெறுப்பட்ட 15 வரி ரத்து. இனி டிவிடண்ட் வரி கிடையாது. ஆனால் டிவிடண்ட் வாங்குபவர்கள் செலுத்த வேண்டும்.

ரூ.15 லட்சத்துக்கு அதிகமான வருமானத்துக்கு 30 விழுக்காடு வரி விதிக்கப்படும்.

புதிதாக தொடங்கப்படும் மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு 15 சதவீதம் பெருநிறுவன வரி விதிப்பு.

பான் கார்டுகள் உடனடியாக கிடைக்க புதிய முறை விரைவில் அமல்.

13:05 February 01

எல்.ஐ.சி., ஐ.டி.பி.ஐ. வங்கி பங்குகள் விற்பனை

எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளில் ஒரு பகுதி விற்பனை செய்யப்படும். ஐ.டி.பி.ஐ. பங்குகளும் விற்க நடவடிக்கை.

13:01 February 01

ஜம்மு காஷ்மீர் லடாக் வளர்ச்சி

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு 30,757 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். லடாக் வளர்ச்சிக்கு 5, 958 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

13:00 February 01

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள் மேம்பாட்டிற்கு 9, 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

12:55 February 01

பொருளாதார வளர்ச்சி

வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காடாக அதிகரிக்கும்.

12:54 February 01

வங்கிகள் தொடர் கண்காணிப்பு

வங்கிகள் திவாலானால் வைப்புத் தொகையில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை திருப்பி அளிக்கப்படும். வங்கிகள் தொடர் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வங்கிகளில் காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு. பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கீடு. 

12:53 February 01

ஜி20 மாநாடு

2022ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டிற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு

12:49 February 01

வரிச்சலுகை

தொழில்முனைவோர் நடவடிக்கைகள் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ளது.

மின்னணு பொருட்களை தயாரிக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை.

சிந்து நாகரீகம் முதல் தற்போது வரை வணிகம், வர்த்தகத்துறையில் சிறப்பான செயல்பாடு.

ஜவுளித்துறைக்கு ரூ.1,480 கோடி நிதி ஒதுக்கீடு.

விரைவில் தேசிய சரக்கு கையாளுதல் கொள்கை கொண்டுவரப்படும்.

12:43 February 01

திருக்குறள்

பிணியின்மை என்னும் திருக்குறளை உதாரணமாக எடுத்துக் கூறி நிர்மலா சீதாராமன் உரை நிகழ்த்துகிறார். அப்போது நரேந்திர மோடி அரசு இந்த திருக்குறளில் வரும் வரிகளுக்கு ஏற்ப நடந்து வருகிறது.

அனைத்து துறைகளிலும் ஊழல் இல்லாத நி்ர்வாகம் வழங்கப்படுகிறது என்று கூறினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சப்தமிட்டனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

12:35 February 01

வரி வசூல்

வரி வசூல் என்ற பெயரில் மக்களை துன்புறுத்தக் கூடாது. நாட்டில் வரி செலுத்தும் மக்களுக்கு மத்திய அரசு நேர்மையாக இருக்கும். 

12:22 February 01

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்

ஆதிச்சநல்லூர் உள்பட ஐந்து இடங்களில் தொல்லியல்துறை அருங்காட்சியகம் அமைக்கப்படும். இந்திய பாரம்பரிய கலாச்சார பல்கலைக்கழகம் அமைக்கப்படும். கலாச்சாரத்துறைக்கு ரூ.3150 கோடி ஒதுக்கீடு.

12:21 February 01

பட்டியிலனத்தவர்கள், பழங்குடியினர் மேம்பாடு

பட்டியலினத்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு 85 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

பழங்குடியினரின் வாழ்வாதார உயர்வுக்கு 53 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. பெண்கள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

சுற்றுலா திட்டத்துக்கு இரண்டாயிரத்து 500 கோடி ஒதுக்கீடு.

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது ஒழிக்கப்படும்.

12:16 February 01

பெண் குழந்தைகளை பாதுகாப்போம்

பேட்டி பச்சாவ் என்ற பெண் குழந்தைகளை பாதுகாப்போம் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு உள்ளது. பெண்கள் தொடர்பான திட்டங்களில் அரசியல் செய்யக்கூடாது. ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் அதிகம் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

12:14 February 01

பாரத் நெட் திட்டம்

பாரத் நெட் திட்டம் மூலம் ஒரு லட்சம் கிராமங்களுக்கு பைபர் ஆப்டிக்கல் (கண்ணாடி இழை) மூலமாக திட்டம் அறிமுகம். நாடு முழுக்க தகவல் சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். பாரத் நெட் திட்டத்துக்கு ஆறாயிரம் (6000) கோடி ஒதுக்கீடு.

தேசிய எரிவாயு தொகுப்பு 27 ஆயிரம் கிலோ மீட்டர் தொகுப்பாக விரிவாக்கம் செய்யப்படும்.

தேசிய அளவிலான இரண்டு அறிவியல் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 

தேசிய ஊட்டச்சத்து திட்டம்

தேசிய ஊட்டச்சத்து திட்டத்துக்கு ரூ.35 ஆயிரத்து கோடி நிதி ஒதுக்கீடு.

சுத்தமான காற்று திட்டத்துக்கு ரூ.4,400 கோடி ஒதுக்கீடு. உலக நாடுகளுன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க திட்டம். எரிசக்தி மற்றும் புதுபிக்க தகுந்த எரிசக்தி திட்டத்துக்கு ரூ.22 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

அனைத்து வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு 3.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு'

அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு

தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் பலன் அடையும்.

11:51 February 01

புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை நாடு முழுக்க விரைவில் அமல்படுத்தப்படும். மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயிலும் வகையில் ஊக்கப்படுத்தப்படுவார்கள்.

150 பல்கலைக்கழகங்களில் புதிய பாடத்திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும்.

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். முதுகலை மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னணி கல்வி நிலையங்களிலும் ஆன்லைன் முறையில் கல்வி பயின்று பட்டம் வழங்கும் முறை அமல்படுத்தப்படும்.

இந்திய கல்வி ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும்.

போலீஸ் பல்கலைக்கழகம்

உத்தரப் பிரதேசத்தில் தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். கல்வித் துறைக்கு 99 ஆயிரத்து 300 கோடி நிதி ஒதுக்கீடு. திறன் மேம்பாட்டுக்கு வரும் நிதியாண்டில் மூவாயிரம் கோடி ஒதுக்கீடு.

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ஐந்து நகரங்கள் சீர்மிகு நகரங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய ஜவுளி திட்டத்துக்கு ரூ.1480 கோடி நிதி ஒதுக்கீடு.

ஏற்றுமதி வணிகம்

அனைத்து மாவட்டங்களுக்கு ஏற்றுமதி கேந்திரமாக திகழ வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் கனவு. தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.27 ஆயிரத்து 300 கோடி நிதி ஒதுக்கீடு.

ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் காப்பீடு திட்டம்.

கட்டமைப்பு

இரண்டாயிரம் கிலோ மீட்டர் நெடுஞ்சாலை அமைக்க திட்டம்.

சென்னை பெங்களுரு இடையே எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்படும்.

தேஜஸ் வகை ரயில்கள் மேலும் அறிமுகப்படுத்தப்படும். சுற்றுலா சிறப்பு வாய்ந்த இடங்கள் தேஜஸ் ரயிலுடன் இணைக்கப்படும். சென்னை பெங்களுருஇடையே எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்படும்.

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 150 ரயில்களை இயக்க திட்டம். போக்குவரத்து கட்டமைப்புக்கு ரூ.1.7 லட்சம்  கோடி ஒதுக்கீடு.

ரயில் நிலையங்கள் அருகே சோலார் மின்சார நிலையங்கள் அமைக்கப்படும்.

550 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்து தரப்படும்

டிஜிட்டல் மின்மீட்டர்

ப்ரிபெய்டு முறையில் மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் புதிய மின்மீட்டர்கள் வழங்கப்படும்.

11:47 February 01

மீனவர்கள் பாதுகாப்பு, சுகாதாரம்

மீனவர்கள் பாதுகாப்பு

சாகர் மித்ரா என்னும் திட்டம் வாயிலாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

சுகாதாரம்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகள் பங்களிப்புடன் இரண்டாயிரம் மருத்துவமனைகள் அமைக்கப்படும். தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.12 ஆயிரத்து 300 கோடி நிதி ஒதுக்கீடு.

பிரதமரின் ஜன் ஆரோக்யா திட்டத்துக்கு ரூ.69ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு. மக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் மருந்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

ஜன் ஆரோக்யா திட்டம்

பிரதமரின் ஜன் ஆரோக்யா திட்டத்துக்கு 3.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11:38 February 01

ரூ.15 லட்சம் கோடி விவசாய கடன் இலக்கு

விளைப் பொருட்களை கொண்டு செல்ல தனியார் பங்களிப்புடன் தனியார் குளிர்பதன ரயில் தொடங்கப்படும். விமானப் போக்குவரத்து துறை உதவியுடன் கிஸான் உடான் திட்டம் தொடங்கப்படும். நபார்டு வங்கி மூலமாக மறுகடன் வழங்கும் திட்டம்

கிஸான் உடான் திட்டம் மூலமாக விவசாய சந்தை மேம்படுத்தப்படும். விவசாயிகள் பயன்பெற கடன் வசதி. ரூ.15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயக் கடன் வழங்க இலக்கு.

கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி என்ற புதிய திட்டம் தொடங்கப்படும். வடகிழக்கு மாநிலங்களில் விவசாயத்தை மேம்படுத்த கிஸான் உடான் திட்டம் உதவும்.

11:36 February 01

ஆத்திச்சூடி

'பூமி திருத்தி உண்' என்ற ஔவையாரின் ஆத்திச்சூடி பாடலை நிர்மலா சீதாராமன் நினைவுகூர்ந்தார். கடந்த ஆண்டு பட்ஜெட் உரையின்போது, புறநானுறு பாடலை மேற்கொள் காட்டினார்.

11:28 February 01

சோலார் பம்புகள் அமைக்க நிதியுதவி நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், நடுத்தர குடும்பத்தின் வளர்ச்சியை கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா மூலமாக இந்தியாவின் வளர்ச்சி உலக அரங்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:-

மூன்று நோக்கங்கள்

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமுதாயத்தின் மீது அக்கறை செலுத்துதல்.

கடன்

2014ஆம் ஆண்டு 52.2 விழுக்காடாக இருந்த நாட்டின் கடன் 2019ஆம் ஆண்டு 48.7 விழுக்காடாக குறைந்துள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

சோலார் பம்புகள் அமைக்க உதவி

விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க மோடி அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும்.

வேளாண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களுக்கு தனிக்கவனம் செலுத்தப்படும்.

20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவிகள் அமைக்கப்படும்.

11:15 February 01

மத்திய பட்ஜெட் 2020-21 நிர்மலா சீதாராமன் உரை

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் உரையை வாசிக்கிறார் நிர்மலா சீதாராமன்

நாட்டில் தற்போது 16 லட்சம் புதிய வரி செலுத்துபவர்கள் உருவாகியுள்ளனர். சரக்கு சேவை வரி அமலாகிய பிறகு ஒவ்வொரு குடும்பத்தின் 4 விழுக்காடு அளவிற்கு அன்றாடம் செலவு குறைந்துள்ளது.

வரி கணக்கு தாக்கலுக்கு மிகவும் எளிமையான முறை ஏப்ரல் மாதம் முதல் அறிமுகமாகும். நாடு முழுவதும் 40 கோடி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உலகின் ஐந்தாவது பொருளாதார சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கிறது. சரக்கு சேவை வரி நாட்டை ஒருங்கிணைத்துள்ளது.

11:08 February 01

அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையில் பட்ஜெட் நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரும் பலனளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

சரக்கு சேவை வரி அமல்படுத்தப்பட்டது மோடி அரசின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனை. பணவீக்க வீதமும் கட்டுக்குள் உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

இந்த நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மக்களின் செலவிடும் சக்தியை அதிகரிக்கும் வகையில் இந்த பட்ஜெட் திகழும்.

11:03 February 01

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் உரை

2020-21ஆம் ஆண்டு பொதுபட்ஜெட்டை அறிமுகப்படுத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை நிகழ்த்துகிறார். 

10:59 February 01

சரக்கு சேவை வரி வசூல் ஒரு லட்சம் கோடி

சரக்கு சேவை அமல்படுத்திய 2017ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது இரண்டாவது முறையாக வரி வசூல் ஒரு லட்சம் கோடியை தாண்டியது. 

10:42 February 01

'தொழில்துறையினரின் பிரச்னைகளை தீர்க்கட்டும்:' காங்கிரஸ்

ரன்தீப் சுர்ஜிவாலா

கடந்தாண்டு பட்ஜெட் மக்களின் வாங்கும் சக்தியை குறைத்து, வேலைவாய்ப்பின்மையை அதிகரித்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பாதித்தது.

இந்தாண்டு பட்ஜெட், வரி குறைப்பு மூலம் ஊதியம் பெறும் வர்க்கத்திற்கு நிவாரணம் அளிக்கும் வகையிலும், கிராமப்புற இந்தியாவில் முதலீடு செய்வதோடு, தொழில் துறையினரின் பிரச்னைகளை தீர்க்கட்டும் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நம்பிக்கை தெரிவித்தார்.

10:33 February 01

பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருகை

நாட்டின் நிதிநிலை அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் தாக்கலாகும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றம் வருகை புரிந்தார்.

10:22 February 01

குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

குடியரசுத் தலைவருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

10:16 February 01

நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்துள்ளார். அவருடன் இணையமைச்சர் அனுராக் தாகூரும் உடனிருக்கிறார்.

10:07 February 01

நாட்டின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதிநிலை அறிக்கையை இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்துவரும் நிலையில், இந்த பட்ஜெட் மக்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Last Updated : Feb 1, 2020, 1:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details