தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பட்ஜெட் 2019: பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் - ஜி.டி.பி வளர்ச்சி

டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் எனவும், 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாட்டை பயணிக்க திட்டங்கள் வகுப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

eci

By

Published : Jul 4, 2019, 1:37 PM IST

2019-20ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பவுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.சுப்ரமணியன் இந்த ஆய்வறிக்கையைத் தயார் செய்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கையை இன்று தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையானது நாட்டின் பொருளாதார நிலை குறித்து விரிவான பார்வையில் உருவாக்கபடுவதாகும். இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் அரசின் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு பட்ஜெட் அறிவிப்புகள், திட்டங்கள் அமைக்கப்படும். எனவே பட்ஜெட்டுக்கு நிகராக பொருளாதார ஆய்வறிக்கையும் பார்க்கப்படுகிறது. காந்தியின் நோக்கில் நாட்டின் சாமானியனின் வாழ்வை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார ஆலோசகர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

5 லட்சம் கோடி டாலர் பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவாக்க செயல்திட்டம்

ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • 8 சதவீத வளர்ச்சியை நோக்கிய பாதை என்ற திட்டத்துடன் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது
  • முதலீடு, சேமிப்பு, ஏற்றுமதி, வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகிய அம்சங்களை ஒருங்கிணைத்து முன்னேற்றத் திட்டம்
  • மேற்கண்ட ஒருங்கிணைந்த செயற்பாட்டின் மூலம் சுமார் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார சக்தியாக 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உருமாற்றம் செய்யத் திட்டம்
  • 2018-19ஆம் ஆண்டு உணவுப் பொருட்களின் விலை சரிவால் உற்பத்தியில் பின்னடைவு
  • தேர்தல் நடவடிக்கை காரணமாக இந்தாண்டு ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் பொருளாதார நடவடிக்கையில் தேக்கம்
  • ரிசர்வ் வங்கியின் வட்டிக்குறைப்பு நடவடிக்கை முதலீட்டுக்கான கடன் தொகை வழங்குவதை ஊக்கப்படுத்துகிறது. நடப்பாண்டு முதலீட்டு நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
  • வங்கி வாரக்கடன் தொகை தொடர் சீர்திருத்தங்களால் குறைக்கப்பட்டுள்ளது

இதுபோன்று பல்வேறு தகவல்களை விரிவான வகையில் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சகத்தின் வலைதள பக்கங்களில் ஒன்றான http://mofapp.nic.in:8080/economicsurvey/ இல் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.

ABOUT THE AUTHOR

...view details