சுதந்திர இந்தியா வரலாற்றின் முழுநேர முதல் பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் 2019-20க்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் அறிவிப்புகளை கீழே காண்போம்.
1) ஸ்டான்ட் அப் இந்திய திட்டம் மூலம் 300 தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
2) வருடத்திற்கு ரூ.1.5 கோடிக்கு கீழ் வியாபாரம் செய்யும் சில்லரை வியாபாரிகளுக்கு பிரதான் மந்திரி கர்மா யோகி மான்தான் திட்டத்தின் கீழ் ஒய்வூதியம் அளிக்கப்படும்.