இந்தியாவின் சுற்றுலாத்துறை கடந்த 10 ஆண்டுகளில் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. குறிப்பாக நாட்டின் விமானப்போக்குவரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது. பல்வேறு நகரங்களில் விமானநிலையம் திறக்கப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உடான்(UDAN) திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்ற அம்சங்கள் அரசின் கொள்கை முடிவுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டன.
பட்ஜெட் 2019: சிறப்புக் கவனம் பெறுமா சுற்றுலாத்துறை? - விமானப் போக்குவரத்து
டெல்லி: நாட்டின் வளர்ந்து வரும் துறைகளுள் ஒன்றாக விளங்கும் சுற்றுலாத்துறைக்கு பட்ஜெட்டில் இம்முறை சிறப்பு கவனம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரந்து விரிந்து கிடக்கும் இந்திய நாட்டில் இயற்கை சுற்றுலாத் தலங்கள், தொன்மையான பாரம்பரிய இடங்கள், நினைவுச்சின்னங்கள் என்று பலதரப்பட்ட விதத்தில் சுற்றுலாத்துறை உள்ளது. இதை வணிக ரீதியாகப் பயன்படுத்தும் வகையில் ரயில்வே, விமானப் போக்குவரத்துத் துறைகளைக் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை மத்திய அரசு சில ஆண்டுகளாக அறிவித்து வருகிறது.
இந்தாண்டும் மத்திய நிதிநிலை அறிக்கையில் சுற்றுலாத்துறை அதனுடன் தொடர்புடைய போக்குவரத்துத்துறைக்குச் சிறப்புக் கவனம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கும் விடுதிகளுக்கான ஜி.எஸ்.டி வரி குறையும் பட்சத்தில் சுற்றுலாத்துறைக்குக் கூடுதல் ஊக்கமாக இருக்கும் என துறைசார்ந்த வல்லுநர்கள் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.