கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுக்க 21 நாட்கள் பூட்டுதல் (லாக்டவுண்) அறிவிக்கப்பட்டுள்ளது. இது வருகிற 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்நிலையில் உத்தரகாண்டில் வங்கிப் பணிகள் தடைப்பட்டது.
தற்போது வங்கிப் பணிகள் மீண்டும் தொடர்கிறது. வாடிக்கையாளர்கள் அதிகம் கூடுவதை தவிர்த்து சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் சில கட்டுப்பாடுகளுடன் வங்கிகள் இயங்குகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கும் வங்கிப் பணிகள் மதியம் ஒரு மணி வரை தொடர்கிறது.
இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மாவட்ட ஆட்சியர் விஜய் குமார் ஜோக்தாண்டே பார்வையிட்டார். அப்போது, “கரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்கு போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சமூக தூரம் மற்றும் சானிடைசர் வழங்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.