டெல்லி:ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி), உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை இணைந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு பகுதி நிதியுதவி வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடிவருகிறது.
சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் லட்சியத் திட்டம் குறித்து இந்திய அரசு விவாதித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ஐசிஎம்ஆர்) சோதனை வசதிகளை மேம்படுத்துவது உள்பட பல தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏஐஐபி) துணைத் தலைவர் டி.ஜே. பாண்டியன் கூறியுள்ளார்.