மத்திய நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல்செய்தார். அதனையொட்டி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்தாண்டுக்கான பட்ஜெட் தங்களுக்குத் திருப்தி அளிக்கும்விதமாக இல்லை என 45 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். விலைவாசி உயரும் எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.
மத்திய பட்ஜெட் 2021: கருத்துக்கணிப்பில் மக்கள் கூறுவது என்ன? - கருத்துக்கணிப்பில் மக்கள் கூறுவது என்ன
டெல்லி: 2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, திருப்தி அளிக்கும் விதமாக இல்லை என 45 விழுக்காட்டினர் கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்பு
பலதரப்பினரை அடக்கிய கருத்துக்கணிப்பில் 1,200 பேரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதில், 35.8 விழுக்காட்டினர் திருப்தி அளிக்கும்விதமாக உள்ளது எனப் பதிலளித்தனர். கடந்தாண்டு, 64.2 விழுக்காட்டினர் பட்ஜெட் திருப்தி அளிக்கும்விதமாக உள்ளது எனத் தெரிவித்திருந்தனர்.
அதேபோல், நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு, விலைவாசி குறையாது என 46.1 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், 18.1 விழுக்காட்டினர் விலைவாசி பெரிய அளவில் குறையும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.