தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

’சொமாட்டோ ஊழியர்களுக்கு தடுப்பூசி’ - நிறுவனர் தகவல் - ஆன்லைன் டெலிவரி

சொமாட்டோ ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் தீபிந்தர் கோயல் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

zomato valets vaccination
zomato valets vaccination

By

Published : May 12, 2021, 3:53 PM IST

ஹைதராபாத்: கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவரும் நிலையில், உணவுகளை டெலிவரி செய்யும் சொமாட்டோ நிறுவனத்தின் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “அனைத்து மக்களும் நலமுடன் இருக்க நாங்கள் விரும்புகிறோம். இந்த பெருந்தொற்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ அனைவரையும் பாதித்திருக்கிறது. எனவே மக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

எங்கள் நிறுவனத்தின் சார்பாக, தொடர்பில்லா டெலிவரி, தொடர்பில்லா பணப்பரிவர்த்தனை போன்றவற்றை செயல்படுத்தி வருகிறோம். மேலும் கூடுதல் பாதுகாப்பிற்காக, ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் பயனர்கள் தங்களின் ‘சொமாட்டோ’ செயலியின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

சொமாட்டோ அறிக்கை

இதேபோல், பொதுமக்களும் குறிப்பாக அரசு அறிவித்து வயது வரம்பை உடையவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வது மிக மிக அவசியம். உங்கள் பாதுகாப்பே எங்களின் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details