தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பன்னீர் ஆர்டர் செய்தா சிக்கன் குடுப்பிங்களா...சொமாட்டோவுக்கு அபராதம்

புனே: பன்னீர் மசாலா ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு சிக்கன் மசாலா அளித்த காரணத்தினால் சொமாட்டோ நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.55,000 அபராதம் விதித்துள்ளது.

ன்னீர் ஆர்டர் செய்தா சிக்கன் குடுப்பிங்களா

By

Published : Jul 8, 2019, 8:48 PM IST

இந்தியாவில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் சொமாட்டோ முதன்மையான நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் சொமாட்டோ உணவை மாற்றி விநியோகம் செய்யததாக புனே நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் சண்முக் தேஷ்முக் என்பவர், பன்னீர் மசாலா உணவை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு சிக்கன் மசாலா வந்திருப்பது தெரியாமல் ஒரே மாதிரி உணவின் ருசி இருந்ததால் சாப்பிட்டுள்ளார். பின்னர் மறுபடியும் ஆர்டர் செய்யும் போது சிக்கன் மசாலாகவே வந்ததை கண்டுப்பிடித்தம் உடனடியாக சொமாட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரியிடம் புகார் செய்துள்ளார். அவர்கள் புகாரைச் சோதனை செய்துவிட்டு எங்கள் மீது தவறு இல்லை என்றும், உணவகத்தில்தான் தவறு நடந்துள்ளது என்றும் பதில் அளித்துள்ளனர்.

இதனையடுத்து புனே நுகர்வோர் நீதிமன்றத்தில் சொமாட்டோ நிறுவனத்தின் மீதும், உணவகத்தின் மீதும் வழக்கறிஞர் சண்முக் புகார் அளித்தார். இந்த வழக்கில் சொமாட்டோ நிறுவனமும், உணவகத்தின் உரிமையாளரும் தங்கள் தவறினை ஒப்புக் கொண்டதால் நீதிமன்றம் ரூ.55,000 அபராதம் விதித்துள்ளது. இந்த பணத்தை 45 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

ABOUT THE AUTHOR

...view details