ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ரூ.1,760 கோடி யெஸ் வங்கியில் முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு எஸ்பிஐ நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நடப்பாண்டு மார்ச் மாதம், யெஸ் வங்கியில் ரூ.7,250 கோடி முதலீடு செய்ய எஸ்பிஐ ஒப்புதல் அளித்தது. முன்னதாக, யெஸ் வங்கி ஒரு பொது சலுகையின் மூலம் நிதி திரட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. யெஸ் வங்கியின் 15ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை பொது வெளியீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 15ஆம் தேதி தொடங்கி ஜூலை 17ஆம் தேதி வரை இதில் முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ளலாம். மேலும், நிறுவன ஊழியர்களுக்கு என மொத்த தொகை கணக்கில் இருந்து 200 கோடி ரூபாய்க்கான பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.