மும்பை: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும தலைமையகம், தெற்கு மும்பையில் உள்ள இரு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு யெஸ் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸ், அனில் அம்பானி இரண்டு ஆயிரத்து 892 கோடி ரூபாய் கடனை கட்ட வேண்டியுள்ளதாகவும், கடனை கட்ட தவறியதால், அதனை மீட்க அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அனில் அம்பானியை சிறை தண்டணையிலிருந்து காப்பாற்றிய முகேஷ் அம்பானி!
ரிலையன்ஸ் தலைமையகம் 21,432 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தினை ரிலையன்ஸ் BSES கையகப்படுத்திய பின்பு, ரிலையன்ஸ் எனர்ஜி என மாற்றப்பட்டது. பின்னர் இது ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் எனவும் மாற்றப்பட்டது. பின்னர் இந்தக் குழு 2018ஆம் ஆண்டு சாண்டாக்ரூஸில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த அலுவலகத்தில் ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு அலுவலகம் தவிர, ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ், ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பிற குழு நிறுவனங்கள் உள்ளிட்ட ரிலையன்ஸ் நிதி சேவைகளின் அலுவலகங்களும் உள்ளன.
சமீபத்திய மாதங்களில் இந்தக் குழுக்கள் கரோனாவின் காரணமாக பூட்டப்பட்டது. ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலான அலுவலகங்கள் ஒரு பிரிவிலும், மறுபுறம் ஜே.எல்.எல் நிறுவனத்துடன் குத்தகைக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அம்பானியிடமிருந்து ரூ.1200 கோடியை மீட்க என்.சி.எல்.டியை நாடும் எஸ்.பி.ஐ!
ஏற்கனவே பல பிரச்னைகளுக்கு மத்தியில் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டு, பின்னர் தற்போது தான் இயல்பாக செயல்பட ஆரம்பித்துள்ளன. இதற்கிடையில் அனில் அம்பானி தரப்பில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டது.
இரண்டு தசாப்தங்களாகவே இந்தக் கடன் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வர்த்தகம் மேம்படவில்லை. இதனால் போதிய பணப்புழக்கம் இல்லாததால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இச்சூழலில் தான் மே 5ஆம் தேதியன்று கடனை திரும்ப செலுத்த நிறுவனத்திற்கு 60 நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டதாக யெஸ் வங்கி தெரிவித்திருந்தது. இதுவரை எந்தவொரு தொகையும் திரும்ப செலுத்தாததால், வங்கி இந்த அதிரடியான நடவடிக்கையினை எடுத்துள்ளது.