உலகில் சாத்தியம் இல்லை என்று சொல்வதை அசால்டாக சாத்தியம் செய்யும் சியோமி நிறுவனம், புதிய சவால் ஒன்றைக் கையில் எடுத்து வெற்றிகரமாக முடித்துக் காட்டியுள்ளது. அவ்வாறு சியோமி சோதனை முயற்சியாக இரண்டு பக்கமும் டிஸ்பிளே கொண்ட சியோமி எம்.ஐ மிக்ஸ் செல்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் டிஸ்பிளே முன் புறத்தில் முழுமையாகவும், பின் புறத்தில் சிறிய கருப்பு பேனலில் கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த செல்போன் சோதனை முயற்சியாகவே விற்பனைக்கு வருகிறது. முதல்கட்டமாக வருகிற டிசம்பர் மாதத்தில் சிறியளவு செல்போன்கள் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் விலையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.