தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 16, 2020, 1:23 PM IST

Updated : Jan 17, 2020, 12:52 AM IST

ETV Bharat / business

சான்டிஸ்க் அசத்தல்: உலகின் மிகச்சிறிய 8டிபி பென் டிரைவ்!

உலகின் மிகச் சிறிய, அதிக திறன் கொண்ட 8 டிபி பென் டிரைவை சான்டிஸ்க் நிறுவனம் செஸ் 2020 நிகழ்வில் காட்சிப்படுத்தியிருக்கிறது.

CES 2020 sandisk, Worlds Smallest pendrive With 8TB Storage, sandisk 8tb pendrive, ces 2020 latest updates, 8டிபி பென் டிரைவ், உலகின் மிகச்சிறிய 8டிபி பென்டிரைவ்
sandisk 8tb pendrive

எஸ்எஸ்டி எனப்படும் சாலிட் ஸ்டேட் டிரைவ்கள், நாம் கணினிகளைப் பயன்படுத்தும் முறையை உண்மையிலேயே விரைவுபடுத்தியுள்ளன. இந்த வேகத்திற்கு நாம் அடிமையாகிவிட்டால், நிலையான இயக்ககங்களை(ஸ்டேன்டேர்டு டிரைவ்) யாரும் பயன்படுத்த விரும்புவதில்லை. தரவு வேகத்திற்கான இந்த தாகத்தை தணிக்க, டிரைவ் தயாரிப்பாளர்கள் அதிக வேகத்தை வழங்குகின்ற போர்ட்டபிள் எஸ்.எஸ்.டி. பென் டிரைவுகளை அறிமுகப்படுத்தினர்.

இருப்பினும் அன்றாடம் எண்ணிலடங்கா தரவை நகலெடுக்கும் நபர்களுக்கு, நிலையான சேமிப்பை வழங்வதில் இருந்த சிக்கலை அகற்ற சான்டிஸ்க் புதிய வழியை கண்டறிந்துள்ளது. செஸ் 2020 (CES 2020) நிகழ்வில் சான்டிஸ்க் நிறுவனம், 8 டெராபைட் திறன்கொண்ட உலகின் முதல் மிகச்சிறிய, அதீத திறன் எஸ்.எஸ்.டி.யின் முன்மாதிரி ஒன்றை வெளியிட்டுள்ளது.

டிக்டாக் செயலியை ஓரங்கட்டுமா ஃபேஸ்புக்கின் லஸ்ஸோ!

தற்போது சிறிய பென்டிரைவில் கிடைக்கும் அதிகபட்ச சேமிப்புதிறன் 4டிபி (4TB) ஆகும். மேலும் சில டிரைவ் தயாரிப்பாளர்கள் மட்டுமே அந்த சேமிப்புத் திறனை வழங்கும் நிலையில், பெரும்பாலும் 2டிபி (2TB) சேமிப்புதிறனே வழங்கப்படுகிறது.

சான்டிஸ்கின் எக்ஸ்ட்ரீம் போர்ட்டபிள் எக்ஸ்டர்னல் எஸ்.எஸ்.டி வரிசையின் ஒரு பகுதியான இந்த 8 டிபி முன்மாதிரி அதைப்போலே தோற்றம் கொண்டிருந்தாலும், சேமிப்பகத்தை அதிகரிக்க உதவும். மேலும், அதிக எண்ணிக்கையிலான மின்னணு தொடர்புகள் ஏற்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது.

சான்டிஸ்க்கின் 8டிபி பென் டிரைவ்

இதன்மூலம், உலகின் மிக உயர்ந்த திறன் கொண்ட சிறிய அளவிலான இந்த எஸ்.எஸ்.டி, வினாடிக்கு 20 ஜிகாபைட் வரை பரிமாற்ற வேகத்தை வழங்க வல்லது என சான்டிஸ்க் கூறியுள்ளது. இதில் உச்சபட்ச வேகத்தை வழங்க யூ.எஸ்.பி டைப்-சி இணைப்பியைப் பயன்படுத்தவேண்டும். இந்த எஸ்.எஸ்.டி சாதனம் எப்போது சந்தையில் வெளியாகும் என்ற உண்மையை சான்டிஸ்க் வெளிப்படுத்தவில்லை என்றாலும், அது இந்திய சந்தை மதிப்பில் 35ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

Last Updated : Jan 17, 2020, 12:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details