தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சென்னையில் மூன்றாவது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு! - உலகெங்கும் வாழும் தமிழர்கள்

சென்னை: உலககெங்கும் வாழும் தமிழர்களை வர்த்தக ரீதியாக ஒன்றிணைக்கும் எழுமின் அமைப்பின் மூன்றாவது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு இந்த மாதம் நடைபெறவுள்ளது.

Business

By

Published : Nov 6, 2019, 7:03 PM IST

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களை வர்த்தக ரீதியாக ஒன்றிணைக்கும் பொருட்டு எழுமின் அமைப்பு மூன்றாவது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் - தலைவர்கள் மாநாட்டை நடத்த உள்ளது.

இந்த மாநாடு குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர், நவம்பர் மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவதாகவும், இந்த மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா கனடா என 35க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்தும் தமிழத்தைச் தொழிலதிபர்கள் வருகை தர உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள திறனாளிகளை சந்தித்து வணிக உறவுகளை மேம்படுத்தும் வாய்ப்பாக இந்த மாநாடு அமையும் என்றும் இதனை தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.

எழுமின் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர்

இந்த மாநாட்டில் தொழில்நுட்பத்துறை, ஏற்றுமதி இறக்குமதி, வணிகம், எலக்ட்ரானிக்ஸ், மருத்துவம், கல்வி, விவசாயம், மருத்துவம் என பல்வேறு துறைகளில் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்படும் எனவும் ஜெகத் கஸ்பர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன? நிபுணரின் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details