தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

விப்ரோவுக்கு புதிய தலைமைச் செயல் அலுவலராக தியரி டெலாபோர்ட் தேர்வு!

விப்ரோவுக்கு புதிய தலைமைச் செயல் அலுவலராக தியரி டெலாபோர்ட் ஜூம் 6ஆம் தேதி முதல் பொறுப்பு வகிக்கவுள்ளார். புதிய தலைமைச் செயல் அலுவலரை நியமித்த பின்னர் பங்குச் சந்தையில் விப்ரோவின் பங்குகள் அதிரடி உயர்வை சந்தித்துள்ளன.

தியரி டெலாபோர்ட்
தியரி டெலாபோர்ட்

By

Published : May 29, 2020, 11:03 PM IST

டெல்லி: இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, பிரபல பெரு நிறுவன நிர்வாகி தியரி டெலாபோர்ட்டை தனது புதிய தலைமைச் செயல் அலுவலராக நியமித்துள்ளது.

தற்போதைய தலைமைச் செயல் அலுவலரான அபிதாலி நீமுச்வாலா ஜூன் ஒன்றாம் தேதி தனது பதவியை விட்டு விலகுகிறார். அதனைத் தொடர்ந்து டெலாபோர்ட், ஜூன் 6ஆம் தேதியில் இருந்து பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். இச்சூழலில் மும்பை பங்குச் சந்தையில் விப்ரோவின் பங்குகள் ரூ. 9 அல்லது 5 விழுக்காடு அளவு அதிகரித்து ரூ. 209.75க்கு விற்பனையானது.

தியரி டெலாபோர்ட் பிரபல பெருநிறுவன நிர்வாகி ஆர்தர் ஆண்டர்சனுடன் 1992ஆல் சீனியர் ஆடிட்டராக தனது பணியை தொடங்கியவர். பிரபல நிறுவனமான கேப்ஜெமினியின் தலைமைச் செயல் அலுவலராக டெலாபோர்ட் பொறுப்பு வகித்திருக்கிறார்.

எஸ்பிஐ வைப்பு நிதி மீதான வட்டிக்குறைப்பு!

விப்ரோவின் தலைமைச் செயல் அலுவலராக அபிதாலி நீமுச்வாலா நான்கு ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவருக்கு புதிய அலுவலர் நியமிக்கப்பட்ட பின்னர், ஓய்வு அளிக்கப்படும் என்று விப்ரோ ஜனவரி மாதத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நீமுச்வாலா டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றியவர். அவர் விப்ரோவில் 2015ஆம் ஆண்டு முதல் பணியில் இருந்துவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details