டெல்லி: சீனாவை தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் பிபிகே நிறுவனம் ஒன்-ப்ளஸ் (OnePlus), ஒப்போ (Oppo), விவோ (vivo), ரியல்மீ, ஐக்யூஓ (iQOO) ஆகிய பெயர்களில் இந்திய கைப்பேசி சந்தையில் களமாடி வருகிறது.
இது இல்லை என்றால் மற்றொன்று என்று வாடிக்கையாளர்கள் ஒரு நிறுவனத்தின் தகவல் சாதனங்களையே சுற்றி வரவைக்கும் வியாபார யுக்தியை இந்தியாவில் நிறுவி வெற்றியும் கண்டுள்ளது.
கவுண்டர்பாய்ண்ட் பகுப்பாய்வு தரவுகளின்படி, இந்திய கைப்பேசி சந்தையில் 37 விழுக்காட்டை 2019ஆம் ஆண்டு சீனாவின் பிபிகே நிறுவனத்தின் கைப்பேசிகள் பிடித்துள்ளன. சீனாவின் மற்றொரு நிறுவனமான சியோமி 28 விழுக்காடு சந்தை மதிப்பைப் பெற்றுள்ளது.
எல்லா தரத்திலும் உள்ள வாடிக்கையாளர்களை கவருவதற்காக தனது கிளை படைப்புகளை இந்திய சந்தையில் இந்நிறுவனம் உட்புகுத்தி வந்தது. ஆம் சியோமி நிறுவனத்தின் போக்கோஃபோன் போன்று பிபிகே நிறுவனத்தின் கிளை நிறுவனங்களும் தனித்தனியாக செயல்படும்.
காணுங்கள் பிபிகே நிறுவனத்தின் கிளைப் படைப்புகள்
- ஒன்-ப்ளஸ்: உயர்தர கைப்பேசி விரும்பிகளுக்கு அதிதிறன் அம்சங்களுடன் வெளிவருகிறது