தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வாட்ஸ்ஆப் மீடியா தகவல்களை ஒரு நொடியில் மாற்றும் ஹேக்கர்கள்

கலிபோர்னியா: பொதுமக்கள் வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய மீடியா தகவல்களை ஒரு நொடியில் ஹேக்கர்கள் மாற்றுகிறார்கள் என்னும் அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீடியா பைல் ஜாக்கிங்

By

Published : Jul 16, 2019, 10:08 PM IST

உலகில் பொதுமக்கள் துங்கி எழுந்து உபயோகிக்கும் முதல் விஷயமாகவே வாட்ஸ்ஆப் இருந்து வருகிறது. மக்கள் வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் புகைப்படம், வீடியோ வழியாக நண்பர்களிடம் பகிர்ந்து வருகின்றனர். ஒரு சிலர் வாட்ஸ் ஆப்பில் என்கிரிப்டட் எனப்படும் வாடஸ் ஆப் நிறுவனத்தினாலே தகவல்களைப் பார்க்க முடியாத வசதி உள்ளதால் முக்கியமான ஆவணங்களையும் பிடிஎஃப் பைல் வழியாக அனுப்புகின்றனர்.


இந்நிலையில் வாட்ஸ்அப்பில் என்கிரிப்டட் செய்யப்பட்ட மீடியா தகவல்களும் ஹேக்கர்களால் ஒரு நொடியில் மாற்றி அமைக்க முடியும் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ் ஆப்பில் அனுப்பும் புகைப்படங்கள், ஆவணங்கள் எதுவாக இருந்தாலும் ஒரு நொடியில் தகவல்களை மாற்றி அமைக்கிறார்கள்.

உதராணத்திற்கு, ஒருவர் அனுப்பும் வங்கிக் கணக்குகள் இருக்கும் பிடிஎஃப் பைலை அனுப்பிய நபருக்கே தெரியாமல் வங்கிக் கணக்கு விவரத்தையே ஆவணத்தில் மாற்றி அமைக்க முடியும். பொதுமக்கள் செல்போனில் தகவல்களைச் சேமிப்பதற்குச் செயலிகள் அனுமதிக் கேட்கும் போது "ஓகே" என்று பட்டனை அழுத்தும் போது ஹேக்கர்கள் சுலபமாக உள்ளே நுழைந்து விடுகிறார்கள்.

ஹேக்கர்கள் எளிதாக பயன்படுத்தும் இந்த யுக்திக்கு 'மீடியா பைல் ஜாக்கிங்' என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் செல்போனில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து வகையான மீடியா தகவல்களும் பிக்பாஸ் போல் ஹேக்கர்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த டிஜிட்டல் உலகத்தில் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிப்பது பெரிய போராட்டமாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

ABOUT THE AUTHOR

...view details