இந்தியாவில் பண்டிகை கால விற்பனையில் கடந்த ஆண்டை விட, விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டுள்ளதாக, அதன் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சவுதி அரேபியாவில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு உச்சி மாநாட்டில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. ஆனால் இப்போது சந்தையில் நல்ல ஏற்றத்துடன் வாகன விற்பனையும் நுகர்வு கலாசாரமும் அதிகரித்துவருகிறது. வாகன விற்பனை கடந்தாண்டு பண்டிகை காலத்திலிருந்து பார்க்கையில் இந்தாண்டு இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து கழகத்தின் அங்கமானது இண்டிகோ ஏர்லைன்ஸ்!
மேலும், அதிகரித்த காப்பீட்டுச் செலவுகளும் எரிபொருள்கள் விலை உயர்வும் முதலில் வாகனம் வாங்குபவர்களைச் சுணக்கியது. அதனால் தள்ளுபடிகளின் மூலமே வாகன விற்பனையை அதிகரிக்க முடிந்தது. இதனால் வாகன உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைக்கவும், வாகன விற்பனையகங்களை மூடும் நிலைக்குச் சென்றனர்.
பாமாயில் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கவில்லை - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
ஆனால் அந்த நிலை தற்போது மாறியுள்ளது. முன்னதாக இதே நிகழ்வில் பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி, உலகப் பொருளாதாரம் 'நிச்சயமற்ற தன்மைகளை' எதிர்கொண்டுள்ளது. எனினும் இது நீண்ட காலத்திற்கு மிகப்பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்" என்று கூறினார்.