தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஏர்டெல் ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கும் வோடபோன்-ஐடியா - ஜியோ

ஜியோ சாவன், ஏர்டெல் விங்க் பாடல் செயலிகளுக்கு போட்டியாக வோடாபோன்-ஐடியா நிறுவனமும் புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளது.

VI

By

Published : Feb 9, 2019, 2:11 PM IST

சில மாதங்களுக்கு முன்பு ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனம் வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து கொண்டது. இதன் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது வோடாபோன்-ஐடியா.

தற்போது அந்த நிறுவனம் ஏர்டெல் விங்க் மற்றும் ஜியோ சாவன் பாடல் செயலிகளுக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது ஐடியா நிறுவனத்துக்கு மட்டும் உள்ள பாடல் செயலி நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து வோடாபோன்-ஐடியா நிறுவன தலைமை செயல் அதிகாரி பலேஷ் ஷர்மா கூறியதாவது, தற்போது இயங்கிவரும் ஐடியா பாடல் செயலி நிறுத்தப்பட்டு விரைவில் மிகச்சிறந்த இசை மற்றும் பாடல் செயலி அறிமுகப்படுத்தப்படும். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறியுள்ளார்.

ஜியோ சாவன் தெற்காசியாவின் பெரிய இசைப்பாடல் இணையதளம், செயலியாகவும்; ஏர்டெல் விங்க் செயலியை பத்து கோடி பேரும் பயன்படுத்துகின்றனர். எனவே வோடாபோன்-ஐடியாவின் இந்த புதிய திட்டம் சந்தையில் நேரடிப் போட்டியாக அமையவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details