தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

Vodafone Idea New Tariff: கட்டணத்தை உயர்த்திய வோடாபோன் ஐடியா நிறுவனம்... - ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணம் உயர்வு

நவம்பர் 25 ஆம் தேதி முதல் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான (prepaid plans) கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் அறிவித்துள்ளது.

Vodafone Idea  airtel  prepaid  mobile tariffs  Vodafone Idea announces revised mobile tariffs  Vodafone Idea New Tariff  top up  Data package  வோடாபோன் ஐடியா  ப்ரீபெய்ட் திட்டங்கள்  ப்ரீபெய்ட்  டாப் அப்  ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணம் உயர்வு  வோடாபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணம் உயர்வு
Vodafone Idea New Tariff

By

Published : Nov 23, 2021, 8:41 PM IST

நேற்றய தினம் (நவ.22) ஏர்டெல் (airtel) நிறுவனம் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான (prepaid plans) கட்டணத்தை 25 விழுக்காடு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இத்துடன் டாப் அப் (top up) திட்டங்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டன. அந்த வகையில் ரூ.48 திட்டத்தை ரூ. 10 உயர்த்தி ரூ.58 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ. 98 திட்டமானது ரூ.118 ஆகவும், ரூ. 251 திட்டம் ரூ. 301 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோலவே ஆண்டு கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இக்கட்டண உயர்வு, ஏஆர்பியு நெட்வொர்க் மற்றும் ஸ்பெக்ட்ரமுக்கு தேவைப்படும் கணிசமான முதலீடுகளை செயல்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளதாக ஏர்டெல் (airtel) நிறுவனம் தெரிவித்தது.

ப்ரீபெய்ட் கட்டண உயர்வு

இந்நிலையில் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம், தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் (prepaid plans) கட்டணங்களை 25 விழுக்காடு உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இக்கட்டண உயர்வு, பயனருக்கான தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சராசரி வருவாயை மேம்படுத்த உதவும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் கட்டணம்

மேலும் இக்கட்டண உயர்வு நவம்பர் 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக வோடாபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் 28 நாள்களுக்கான திட்டத்துக்கான கட்டணம் ரூ. 79-ல் இருந்து ரூ. 99 ஆகவும், பல திட்டங்கள் மற்றும் டேட்டா பேக்கேஜ்களின் (Data package) கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Airtel New Tariffs : கட்டணம் உயர்வு - ஏர்டெல் பயனாளர்கள் அதிர்ச்சி

ABOUT THE AUTHOR

...view details