தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஆயிரம் கோடி ரூபாய் ஏஜிஆர் தொகை செலுத்திய வோடாஃபோன்!

வருவாய் பகிர்வு தொகை நிலுவையில் வோடாஃபோன்-ஐடியா நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாயைச் செலுத்தியுள்ளது. முன்னதாக, இந்நிறுவனம் மூன்று தவணைகளாக 6,854 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை அரசுக்குச் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Voda Idea pays another AGR dues
Voda Idea pays another AGR dues

By

Published : Jul 18, 2020, 7:48 PM IST

டெல்லி: வருவாய் பகிர்வு தொகை (ஏஜிஆர்) நிலுவையில் வோடாஃபோன்-ஐடியா நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாயைச் செலுத்தியுள்ளதைத் தொடர்ந்து, இதுவரையில் மொத்தமாக 7 ஆயிரத்து 854 கோடி ரூபாய் அரசுக்குச் செலுத்தியதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்நிறுவனம் மூன்று தவணைகளாக 6,854 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை அரசுக்குச் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அரசுக்குச் செலுத்த வேண்டிய வருவாய் பகிர்வு தொகையைச் செலுத்த கூடுதல் அவகாசம் கேட்டு வோடஃபோன் ஐடியா நிறுவனம் உச்ச நீதிமன்றத்திடம் மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நீதிமன்றம் நிராகரித்தது.

இந்தியனாக தலை நிமிருங்கள்: ஜியோ தருகிறது முற்றிலும் இந்திய தயாரிப்பு தகவல் சாதனங்கள்!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ஏஜிஆர் தொகையை விரைவில் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது. ஆனால், அந்த உத்தரவை நிறுவனங்களும், தொலைத்தொடர்புத் துறையும் பின்பற்றாமல் அவமதித்ததாக உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியது. இதையடுத்து ஏஜிஆர் நிற்தொகை நிலுவையை உடனடியாக நிறுவனங்கள் செலுத்த வேண்டுமென தொலைத்தொடர்புத் துறை நெருக்கடி கொடுத்தது. அதன்படி, நிறுவனங்கள் தற்போது நிலுவைத் தொகையைச் செலுத்திவருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details