தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பயனர்களுக்கு எந்தச் சேவை குறைபாடும் இல்லை - ஏர்டெல், வோடபோன் வாதம்! - ஏர்டெல்

இந்தியாவில் அதிக தொகை கொடுக்கும் சிலருக்கு மட்டும் அதிவேக இணைய வசதி வழங்கும் பிரத்யேக சலுகைகள் வழங்குவதை நிறுத்த பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவிட்டிருந்தது. அப்படியான எந்தச் சேவை குறைபாடுகளையும் பயனர்களுக்கு கொடுக்கவில்லை என ட்ராயிடம் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வோடாஃபோன் ஐடியா
வோடாஃபோன் ஐடியா

By

Published : Jul 25, 2020, 6:04 PM IST

இந்தியாவில் அதிக தொகை கொடுக்கும் சிலருக்கு மட்டும் அதிவேக இணைய வசதி வழங்கும் பிரத்யேக சலுகைகள் வழங்குவதை நிறுத்த பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்திருப்பதோடு, அனைத்து பயனர்களுக்கும் ஒரே தரத்தில் தான் சேவை அளிக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளது.

அதிக விலை கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா வழங்கும்பட்சத்தில், மற்ற சலுகைகளை தேர்வு செய்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு எந்த விதத்தில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என ட்ராய் கேள்வி எழுப்பியிருந்தது.

குறையும் சீன ஸ்மார்ட்போன்கள் மீதான மோகம் - காரணம் என்ன?

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பதில் அளித்த ஏர்டெல் செய்தித் தொடர்பாளர், “அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த நெட்வொர்க் மற்றும் சேவை அனுபவத்தை வழங்க அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக ஏர்டெல் நிறுவனம் தனது பிளாட்டினம் கைப்பேசி வாடிக்கையாளர்கள், ரூ. 499 மற்றும் அதற்கும் அதிக தொகை செலுத்தும் போஸ்ட்பெயிடு இணைப்புகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தது.

அதன்படி பிளாட்டினம் வாடிக்கையாளர்களுக்கு மற்ற வாடிக்கையாளர்களை விட அதிக முன்னுரிமை வழங்கப்படும். இந்த விவகாரத்தில் ஏர்டெல் நிறுவனம் பதில் அளிக்க ட்ராய் ஏழு நாட்கள் காலஅவகாசம் வழங்கி உள்ளது.

சென்னையில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள்

வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ரெட்எக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகையில் மற்ற சலுகையை விட 50 விழுக்காடு வேகமான டேட்டா வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details