தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பெண்கள் மீது வன்முறையா? குரல் கொடுக்க வருகிறது ட்விட்டர்!

வீட்டு வன்முறை குறித்த தகவல்களை தேடும்போது அதற்கு தகுந்தாற்போல் உதவி எண்களையும், அதற்குண்டான தகவல்களையும் ட்விட்டர் உடனுக்குடன் வழங்குகிறது.

Twitter new search
Twitter new search

By

Published : Jun 17, 2020, 9:06 PM IST

டெல்லி:இந்தியாவில் நிலவும் கரோனா நெருக்கடி காலத்தில் மக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றி வரும் நிலையிலும், ஆங்காங்கே ஏற்படும் பெண்கள் மீதான வன்முறையை தடுக்க, அது குறித்த தகவல்களை தனது தேடுபொறியில் ட்விட்டர் தற்போது வழங்குகிறது.

பெண்கள் பாதுகாப்பு மீதான தனது முயற்சிகளை விரிவுபடுத்துவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடனும், தேசிய பெண்கள் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து இம்முயற்சியை ட்விட்டர் எடுத்துள்ளது.

பெண்கள் மீது வன்முறையா? குரல் கொடுக்க வருகிறது ட்விட்டர்!

நீண்ட இடைவெளிக்குப் பின் வெளியான மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன்!

ஐஓஎஸ், ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த சேவையை பெற முடியும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல தரவுகளின் அடிப்படையில் இக்காலகட்டத்தில் பெண்கள் மீதான வன்முறை குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிகின்றன. எனவே, ட்விட்டர் தரப்பில் இந்த சேவையை அளிக்க முடிவு செய்ததாக அதன் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details