தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சந்தைக்கு புதிய என்ட்ரி.... டிக் டாக் வெளியிட்ட முதல் ஸ்மார்ட்போன்! - Smartisan Jianguo Pro 3 smartphone launched

டிக்டாக் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பான ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 (Smartisan Jianguo Pro3) ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3

By

Published : Nov 3, 2019, 12:03 AM IST

டிக் டாக் நிறுவனம் தனது ஒரு செயலியில் அனைத்து மக்களையும் தன்பக்கம் ஈர்த்து சாதனைப்படுத்தியது. தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 என்ற புதிய கைப்பேசி மூலமாக டிக் டாக் செல்போன் தயாரிப்பில் கால் பதித்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் பைட் டான்ஸ் நிறுவனம் அதிகார்ப்பூரவாக செல்ஃபோனை வெளியிட்டுள்ளது.

இந்த கைபேசியின் முக்கிய அம்சம், லாக் ஸ்கிரினிலிருந்தே ஒற்றை ஸ்வைப் மூலமாக டிக் டாக் செயலிக்குப் பயனாளிகள் சென்றுவிடலாம். மூன்று ரகங்களில் மூன்று வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 முக்கிய அம்சங்கள்:

  • 6.39 இன்ச் முழு ஹெச்டி டிஸ்பிளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ ப்ராசஸர் Qualcomm Snapdragon 855+ Processor
  • 48 மெகாபிக்சல், 13 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல், 5 மெகாபிக்சல் என நான்கு ரியர் கேமிரா
  • 20 மெகாபிக்சல் செல்பி கேமரா
  • 12 ஜிபி ரேம்
  • 256 ஜிபி ஸ்டோரேஜ்
  • 4,000mAh பேட்டரி மற்றும் அதிவேக சார்ஜ் திறன் வசதி
  • இந்த செல்ஃபோனின் விலையாக 12 ஜிபி ரேம் மாதிரி ரூ. 36,000 , 8 ஜிபி ரேம் மாடல் (128 ஜிபி ஸ்டோரேஜ்) விலை ரூ. 29,000 , 8 ஜிபி ரேம் மாடல் ( 256 ஜிபி ஸ்டோரேஜ்) விலை ரூ. 32,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்டபோன் பயனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

ABOUT THE AUTHOR

...view details