பெங்களூரு (கர்நாடகம்): இங்கிலாந்து தொலைதொடர்பு நிறுவனத்தின் 5ஜி சேவையை விரிவுப்படுத்த டிசிஎஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
த்ரீ நிறுவனம் இங்கிலாந்து நாட்டில் மிகப்பெரும் தொலைதொடர்பு நிறுவனமாகும். அதன் புதிய 5ஜி சேவையை விரிவுப்படுத்தவும், மேம்படுத்தவும் இணைப்பு தொழில்நுட்ப நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டுவந்தது.
இச்சூழலில், இந்தியாவின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தை, தங்கள் சேவையை மேம்படுத்த தேர்வு செய்துள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.