டெல்லி: வேமோ நிறுவன அலுவலரின் கூற்றுக்கு டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டர் பதிவின் வாயிலாக பதிலளித்துள்ளார்.
அதில், “வேமோ நிறுவனத்தை விட அதி சிறந்த தொழில்நுட்பங்களையும், வன்பொருட்களையும் கொண்டு தான் டெஸ்லா நிறுவன தயாரிப்புகள் உருவாக்கபடுகின்றன. அதுமட்டுமில்லாமல், வணிக ரீதியிலும் எங்களின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.
கூகுளை தலைமையாகக் கொண்டு இயங்கும் தானியங்கி கார் தயாரிப்பு நிறுவனமான வேமோ, டெஸ்லாவின் செயல்பாடுகள் சரியான குறிக்கோளை நோக்கி நகரவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தது. மின்சார தானியங்கி கார் தயாரிப்புகளில் பெரு நிறுவனங்கள் பெருந்தொகை முதலீடு செய்துள்ளது.
இச்சூழலில், இதன் ஆராய்ச்சி மற்றும் சோதனையில் இருக்கும் முன்னணி நிறுவனமான டெஸ்லாவிடம், வளர்ந்து வரும் வேமோ நிறுவனம் சீண்டலில் ஈடுபட்டிருப்பது பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெரும் பேசி பொருளாகியிருக்கிறது.
இதையும் படிங்க: குஜராத் மாநிலத்துக்கு அடித்த ஜாக்பாட் - வருகிறது டெஸ்லா இந்தியா!