நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய எரிபொருள் சார்ந்த மின் உற்பத்தியே அதிகம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. எரிபொருள் சார்ந்த மின் உற்பத்தி சூற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருவதால் மாற்று மின் உற்பத்தியை நோக்கி நகரவேண்டிய தேவை அண்மை காலமாக உருவாகியுள்ளது. மாற்று மின் உற்பத்தியில் இந்தியா தற்போது தனிக் கவனம் செலுத்திவரும் நிலையில் சூரிய மின் உற்பத்தி மையங்கள் நாடெங்கிலும் அமைக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது.
குஜராத்தில் 250 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி பூங்கா - டாடா நிறுவனம் அறிவிப்பு
காந்திநகர்: 250 மெகாவாட் மின்திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையத்தை குஜராத் மாநிலத்தில் டாடா நிறுவனம் அமைக்கவுள்ளது.
இந்நிலையில், பிரபல மின்சக்தி உற்பத்தி நிறுவனமான டாடா பவர்ஸ், இந்தியா முழுவதும் சுமார் 650 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளது. தற்போது அந்நிறுவனம் குஜராத் மாநிலத்தில் உள்ள தோலேரா சூரியப்பூங்காவில் 250 மெகாவாட் மின்திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தொடங்கவுள்ளது.
இதற்கான பணிகள் 15 மாதங்களில் நிறைவுற்று நிலையம் இயக்கத்திற்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலையத்திலிருந்து தயாரிக்கப்படும் மின்சக்தியை குஜராத் மின் பகிர்மான கழகம் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.