தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மணக்க மணக்க வீட்டு சாப்பாட்டையும் டெலிவரி செய்யும் சொமாட்டோ?

சொமாட்டோ நிறுவனம் தனது அடுத்த முயற்சியாக வீட்டு சாப்பாட்டினை டெலிவரி செய்யப் போகிறார்களா என்ற ஆர்வம் வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.

விட்டு சாப்பாடு

By

Published : Jul 9, 2019, 6:56 PM IST

இந்தியாவில் சொமாட்டோ நிறுவனம் உணவு விநியோகம் செய்யும் துறையில் சிறந்து விளங்குகிறது. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய முயற்சிகளை சொமாட்டோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சொமாட்டோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் "Guys, kabhi kabhi ghar ka khana bhi kha lena chahiye" என்று ட்விட் செய்தது.

இந்த வாசகத்தை மொழி பெயர்த்தால் "வாடிக்கையாளர்கள் ஒரு முறையாவது விட்டு சாப்பாட்டை ருசி பார்க்க வேண்டும்" என வருகிறது. ஆனால் இந்த பதிவிற்கு சொமாட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் தீபீந்தர் கோயல் "யார் இந்த பதிவைச் செய்தது.. மிகவும் அருமையான பதிவு" எனக் கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் சொமாட்டோ நிறுவனம் புதிய விட்டு சாப்பாடு அம்சத்தைக் கொண்டு வருகிறதா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல்

முன்னதாக ஸ்விக்கி நிறுவனம் விட்டு உணவை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்வதற்காக 'ஸ்விக்கி டெய்லி' என்னும் புதிய செயலி மூலம் 1000 வாடிக்கையாளர்களுக்கு மாத சந்தா, வாரச் சந்தா எனத் திட்டங்கள் மூலம் விநியோகம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஸ்விக்கிக்கு போட்டியாக சொமாட்டோ நிறுவனமும் விட்டு உணவை விநியோகம் செய்யப் போகிறார்கள் என எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் சமீப காலமாக சொமாட்டோ நிறுவனம் வாடிக்கையாளரின் உணவை விநியோகம் செய்யும் நபர் அருந்தியது, உணவை மாற்றி விநியோகம் செய்யாததால் ரூ.55000 அபராதம் பெற்றது என, பல சிக்கல்களில் சிக்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details