தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தலை சுற்ற வைக்கும் சுந்தர் பிச்சையின் சம்பளம்! - Google CEO Sundar Pichai

நியூயார்க்: கூகுள் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Google CEO Sundar Pichai  CEO of Alphabet Sundar Pichai  sundar pichai salary
sundar pichai salary

By

Published : Dec 22, 2019, 9:42 PM IST

தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கினார்.

தொடர்ந்து அந்நிறுவனத்தை வெற்றிக்கரமாக வழிநடத்தினார். இதனால் இவருக்கு நிறுவனத்தில் மதிப்பு தானாக உயர்ந்தது. இதையடுத்து அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கூகுள் வழங்கியது. அதன்படி 2015ஆம் ஆண்டில் கூகுள் சிஇஓ ஆக பதவி உயர்வுபெற்ற சுந்தர் பிச்சை, கூகுளின் தாய் நிறுவனமான அல்பபேட்டின் தலைமை செயல் அதிகாரியாகவும் (சிஇஓ) ஆகவும் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அல்பபேட் நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தை ஆணையத்திற்கு தெரிவித்துள்ள தகவலில், சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி சுந்தர் பிச்சைக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.1700 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 2020ஆம் ஆண்டு முதல் சுந்தர் பிச்சைக்கு 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதேபோல், 240 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்பட உள்ளது. இந்த மொத்த தொகையான 242 மில்லியன் டாலர்கள் என்பது, இந்திய மதிப்பில் சுமார் 1,700 கோடி ரூபாய் ஆகும். இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுந்தர் பிச்சையின் வருமானம் வருங்காலத்தில் பன்மடங்கு அதிகரிக்கக் கூடும்.

இதையும் படிங்க: கூகுள் தாய் நிறுவனத்தில் தமிழர் சுந்தர் பிச்சைக்குத் தலைமை பொறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details