தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

காபி டே சிஇஓ பொறுப்புக்கு சித்தார்த் மனைவி மாளவிகா தேர்வு! - காபி டே சிஇஓ மாளவிகா ஹெக்டே

மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படும் காபி டே சங்கிலித் தொடர் உணவகத்தின் நிறுவனர் சித்தார்த்தின் மனைவி மாளவிகா ஹெக்டே, காபி டே குழுமத்தின் தலைமை செயல் அலுவலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

coffee day CEO Malavika Hegde
coffee day CEO Malavika Hegde

By

Published : Dec 7, 2020, 9:53 PM IST

Updated : Dec 7, 2020, 10:52 PM IST

பெங்களூர்:காபி டே புதிய தலைமை செயல் அலுவலராக சித்தார்த் மனைவி மாளவிகா ஹெக்டே தேர்வாகியுள்ளார்.

காபி டே நிறுவனர் சித்தார்த், மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. யாரும் எதிர்பார்க்காத இச்சம்பவம் பெருநிறுவனங்கள் மட்டுமில்லாமல், நாட்டு மக்களின் மனதிலும் வடுவாகப் பதிந்தது.

பல கோடி மதிப்புடைய காபி டே தொழிலை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு சித்தார்த்தின் மனைவி மாளவிகா வசம் தேங்கியது. இவர் முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகளாவார்.

இச்சூழலில், நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு சேர்ந்து மாளவிகாவை தலைமை செயல் அலுவலராக தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், சி.எச்.வசுதாரா தேவி, கிரி தேவனூர், மோகன் ராகவேந்திர கோண்டி ஆகியோரை டிசம்பர் 31, 2020 முதல் 2025 டிசம்பர் 30 வரையிலான காலத்திற்கு கூடுதல் இயக்குநர்களாக அறிவித்துள்ளனர்.

Last Updated : Dec 7, 2020, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details