தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

எஸ்பிஐ வங்கி: இனி பணப் பரிவர்த்தனை கட்டணத்திலிருந்து விலக்கு!

இந்தியாவின் மிகப்பெரும் வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு, இணைய வழி விரைவு பரிவர்த்தனை அம்சங்களான ஆர்டிஜிஎஸ்(RTGS), என்இஎஃப்டி(NEFT), ஐஎம்பிஎஸ்(IMPS) கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி

By

Published : Jul 13, 2019, 11:30 AM IST

நாட்டின் மிகப் பெரும் வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, 25 விழுக்காடு சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. இந்த வங்கியானது தற்போது தனது விரைவு பரிவர்த்தனை அம்சங்களான ஆர்டிஜிஎஸ்(RTGS), என்இஎஃப்டி(NEFT), ஐஎம்பிஎஸ்(IMPS) மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, கட்டணங்கள் எதுவும் வசூல் செய்யப்படமாட்டாது என தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வங்கி இணைய வழி பரிவர்த்தனை செயலிகளான யோனோ(YONO BANKING), கணினி வங்கி, மொபைல் வங்கி என அனைத்திற்கும், இக்கட்டண விலக்கு உண்டு என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கான நடைமுறை காலம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியுள்ளது.

ஜூலை 1ஆம் தேதி, முன்னதாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து ரூபாய் 1 முதல் ரூபாய் 5 வரை என்இஎஃப்டி பரிவர்த்தனைகளுக்கும், ரூபாய் 5 முதல் 50 வரை ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகளுக்கும் வசூலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details