தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

எஸ்பிஐ வைப்பு நிதி மீதான வட்டிக்குறைப்பு!

மும்பை: எஸ்பிஐ வைப்பு நிதி மீதான வட்டியில், சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

SBI cuts
SBI cuts

By

Published : May 28, 2020, 7:17 PM IST

பொதுத்துறை கடன் வழங்குநரான எஸ்பிஐ, இந்த மாதத்திலேயே இரண்டாவது முறையாக வட்டிக்குறைப்பு செய்துள்ளது. அதன்படி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தினை 40 புள்ளிகள் வரை குறைத்துள்ளது.

இவ்வாறு குறைக்கப்பட்டுள்ள இந்த வட்டி விகிதங்கள் மே 27ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

பொது மக்களுக்கான புதிய வட்டி விகிதம் 7 முதல் 45 நாட்கள் வரையிலான வைப்புத் தொகைக்கு 2.9 விழுக்காடும், 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்புத் தொகைக்கு 3.9 விழுக்காடும் குறைத்துள்ளது. 1 ஆண்டு முதல் 2 ஆண்டுக்குள் 5.6 விழுக்காடு எனவும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வீ கேர் டெபாசிட் திட்டத்தில், முதலீடு செய்யும் போது 6.50 விழுக்காடு வரை மூத்த குடிமக்களுக்கு லாபம் கிடைக்கும். எனினும், முதிர்வு காலம் முன்பே முதலீட்டிலிருந்து வெளியேறினால், வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உண்டு. ஆக இந்த வட்டிக் குறைப்பானது, மூத்த குடிமக்களுக்கு பெரிதாகப் பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்பில்லை என எஸ்பிஐ நிறுவன தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் மரணம்

ABOUT THE AUTHOR

...view details