தென் கொரியாவின் தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தனது புதிய கண்டுபிடிப்பாக ISOCELL GN1 எனப்படும் 50 எம்பி இமேஜ் சென்சாரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை உபயோகிப்பதின் மூலம் டிஜிட்டல் கேமராவில் கிடைக்கும் 8k காட்சி தரத்தினை வினாடிக்கு 30 பிரேம்களில் (30 frames-per-second) பெற்றிட முடியும். பிரேம் ரேட் அதிகமாக இருப்பதால் வீடியோ, அனிமேஷன் காட்சிகள் பார்ப்பதற்குச் சிறப்பாக இருக்கும்.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த GN1 சென்சார் உபயோகிப்பதின் மூலம் குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களிலும் தெளிவான காட்சியைப் படம்பிடிக்க முடியும். டிஜிட்டல் கேமரா போன்று ஆட்டோ-ஃபோகஸும் (Auto-focus) அதிவேகத்தில் செயல்படும். செல்போன்களில் உள்ள சென்சார்கள் ஆட்டோ-ஃபோகஸை கண்டறிவதற்குத் தான் முக்கியத்துவம் அளிக்கின்றன.