தென் கொரிய உணவு மற்றும் மருந்து அமைச்சகம், இதயத்தின் இயக்கங்களை கணிக்கும் மின் வரைப்பட அம்சத்தினை வடிவமைத்திருக்கும் சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 தகவல் சாதனத்திற்கு அனுமதியளித்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2: இசிஜி அம்சத்துக்கு அனுமதி! - samsung smartwatch ecg
இதயத்தின் இயக்கங்களை கணிக்கும் மின் வரைப்பட அம்சத்திற்கு சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 தகவல் சாதனத்திற்கு தென் கொரிய உணவு மற்றும் மருந்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
samsung galaxy watch active 2
சாம்சங் ஹெல்த் மானிட்டர் செயலி மூலம் இதனை நாம் தெரிந்துகொள்ள முடியும். விரலைக் கொண்டு தொடுதிரையில் காட்டும் பொத்தானை அழுத்தி பிடிக்கும்போது, சாம்சங் வாட்ச் செயல்படும்.
அதில் சேகரிக்கப்படும் தகவல்கள், செயலிக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்மூலம் நம் இதயத்தின் செயல்பாடுகளை துல்லியமாக கணிக்க முடியும் என நிறுவனம் கணித்துள்ளது.