தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பிஎல்ஐ மூலம் பயன்பெற விண்ணப்பித்திருக்கும் சாம்சங், ஆப்பிள்-இன் ஒப்பந்த நிறுவனங்கள்!

மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெற சாம்சங், ஆப்பிள் ஆகியவற்றின் ஒப்பந்த நிறுவனங்களாக செயல்படும் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. உள்நாட்டில் கைபேசி தயாரிப்பை பெருக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது.

Samsung Apple contract
Samsung Apple contract

By

Published : Aug 1, 2020, 6:40 PM IST

டெல்லி:மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெற சாம்சங், ஆப்பிள் ஆகியவற்றின் ஒப்பந்த நிறுவனங்களாக செயல்படும் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

இத்திட்டத்தில் பயன்பெற சாம்சங், ஃபாக்ஸ்கான் ஹான் ஹை, ரைசிங் ஸ்டார், விஸ்ட்ரான், பெகாட்ரான் ஆகிய கைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. மேலும் இத்திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனங்களில் லாவா, டிக்சன் டெக்னாலஜிஸ், மைக்ரோமேக்ஸ் பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவையும் விண்ணப்பித்துள்ளன.

ஸ்மார்ட்போன் சந்தை ஆண்டின் 2ஆம் பாதியில் 40% வளர்ச்சி காணும்: அறிக்கையில் தகவல்

உலகளாவிய கைபேசிகளின் விற்பனை வருவாயில் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 60 விழுக்காடு சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. இத்திட்டதில் இந்நிறுவனங்கள் பயன்பெறும் பட்சத்தில் இந்தியாவிலிருந்து கைபேசி ஏற்றுமதி வெகுவாக அதிகரிக்கும்.

ஜூன் மாதம் கைபேசிகளை ஏற்றுமதி செய்வதற்காக இந்தியாவை ஒரு முக்கிய உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ரூ. 41,000 கோடி உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்தை ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டது. இதன் மூலம் 12 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.

பி.எல்.ஐ திட்டத்திற்காக 22 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அவற்றின் மூலம் வரும் 5 ஆண்டுகளில் ரூ. 11.5 லட்சம் கோடி மதிப்புள்ள கைபேசிகளும், அவற்றின் உதிரி பாகங்களும் உற்பத்தி செய்யப்பட்டு அதில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இன்று (ஆகஸ்ட் 1) கூறியுள்ளார்.

2ஜி கைபேசிகளை ஒதுக்கும் காலம் வந்துவிட்டது: முகேஷ் அம்பானி

இந்த திட்டம் எந்த நாட்டிற்கும் எதிரானதல்ல என்றும் இது இந்தியாவிற்கு மட்டுமே சாதகமானது என்றும் கூறியிருக்கும் அமைச்சர், சர்வதேச நிறுவனங்கள் ரூ. 15,000க்கும் மேற்பட்ட விலையுள்ள கைபேசிகள் தயாரிக்கப்படுவதால் நேரடியாக 3 லட்சமும், மறைமுகமாக 9 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்தில் பயனடைய ஆப்பிள் நிறுவன உற்பத்தியாளர்களான ஃபாக்ஸ்கான் மற்றும் வின்ஸ்ட்ரான் ஆகிய இரு பெரிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details