தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

அதீத வசதிகளுடன் வெளியாகிறது ரெனால்ட் ட்ரைபர் - Renault Triber launch

ரெனால்ட் நிறுவனத்தின் புதிய படைப்பான ரெனால்ட் ட்ரைபர் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

ரெனால்ட் ட்ரைபர்

By

Published : Aug 28, 2019, 7:07 PM IST

பிரெஞ்சு நிறுவனமான ரெனால்ட் ஆட்டோமொபைல் துறையில் தனக்கென்று தனி அடையாளமும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.ரெனால்ட் நிறுவனத்தின், ’ரெனால்ட் ட்ரைபர்’ கார் இந்தியாவில் ரூ. 4.95 லட்சத்திற்கு விற்பனைக்கு வருகிறது.

ரெனால்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இதுகுறித்து கூறுகையில், "ரெனால்ட் ட்ரைபர் கார் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைவோம். ரெனால்ட் ட்ரைபர் கவர்ச்சிகரமான விலையினால் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்குத் தகுந்த வாகனமாக அமையும். ஆட்டோமொபைல் சந்தையில் ரெனால்ட் பிராண்டை வளர்ப்பதை எதிர்நோக்கியுள்ளதால், இந்தியாவில் ரெனால்ட் ட்ரைபர் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

ரெனால்ட் ட்ரைபர் சிறப்பு அம்சங்கள்:

  • கார் ஸ்டாட்,ஸ்டாப் செய்வதற்குத் தனி பட்டன்
  • இரண்டாவது,மூன்றாவது இருக்கை வரிசைக்குத் தனி குளிர்சாதன வசதி
  • எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • நான்கு ஏர்பேக்குகள்
  • இரண்டாவது இருக்கையைச் சாய்க்கும் வசதி
  • 100க்கும் மேற்பட்ட இருக்கை வகைகள்
  • 999சிசி, 20km/ml


ரெனால்ட் ட்ரைபர் குறைந்த விலையில் அதீத தொழில்நுட்பத்துடன் கார் வாங்க நனைக்கும் வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details